நிதர்சனம்
உனக்காய் ஒரு ஜீவன்
உறங்காமல் இருக்கும் பொது
நாலாம் குரங்கை
மீறத்துடிக்கும் மனது!
உடைத்துப் பார்க்க விரும்பாதே
இன்று நீ வேடிக்கை பார்க்கலாம்-ஆனால்
நாளையோ வேடிக்கை பார்க்கப் படுவாய்!
வரைமுறை இல்லா வரையறைகள்.
பணிந்து போவதில் கூட
பக்குவமே தெரியும்!
குளிவதர்க்காக விழும் "லைக்குகளும் "
கட்டிப்போட வைக்கும் "கமெண்டுகளும் "
காலப் போக்கில்
கண நேரம் மறையும்!
பின்னாளில்,
வெற்றிடமாய் தெரியும்
இடத்தை நிரப்ப
நம்மால் விரட்டப்பட்ட
பஞ்சுகளும்,
உடைக்கப்பட்ட பலூன்களுமே
தேவைப்படலாம்!