அகவை ஐம்பத்தொன்னு
ஒன்னிலே அகவை ஐம்பத்தொன்னிலே ;
உன்னிலே உந்தன் கண்ணிலே ;
இளமை துள்ளலே ! இனிமை மின்னலே !
கவிதை சொல்லிலே ; கடமை செயலிலே !
புதுமை நடையிலே ;புத்துணர்ச்சி உடலிலே !
வளர்ச்சி உன் நினைவிலே ;
தளர்ச்சி அது உன்னில் தெரியலே !
மலர்ச்சி உன் மடியிலே ;
மகிழ்ச்சி உன் மனதிலே !
உயர்ச்சி உன் நிலையிலே ;
புகழ்ச்சி உன் வழியிலே !
எதிர் காலம் உந்தன் கனவிலே ;
வியப்பு எங்கள் மனதிலே !
சூழ்ச்சி விலகவே ; மாட்சி நீ
வருக வருகவே ! இங்கு
வளமை வளர்க ! வளர்கவே !!
வசிகரன்.க