தலைக்கிரீடம்
இன்னும்
எத்தனைனாட்கள்
எழில் தேவதையவள்
தங்க தேகத்தின்
மிளிரிந்திடும்
நிரந்தர
அங்கமாகவே
இருப்பதென வெண்ணி பொறுத்திருந்து
பொறுத்திருந்து
பொறுமையிழந்து
பொருமித்தானோ ...
தன் இச்சைமிகு
பச்சை
மருதாணியை
அருகழைத்து
தகுந்தவாறு
அதையரைத்து
தனக்குத்தானே
தன்னிச்சையாய்
தலைக்கிரீடம் தனை
தலைக்கொண்டனவோ ??
தளிர் விரல்கள்....