மெய்யிலக்கு

மை நிறைத்துக்
கவி எழுது
மனதைப் பார்த்து.

கை நிறைத்து
வளம் எழுது
வறுமை தீர்த்து.

நா நிறைத்து
உரை நிகழ்த்து
நியாயம் கோர்த்து.

கா மகிழக்
கலை எழுது
கனிவைச் சேர்த்து

பூ நிறைத்து
மணம் எழுது
பூவை பார்த்து.

தீ நிறைத்து
போர் நிகழ்த்து
தீமை பார்த்து.

உதிர்த்த திங்கே
உணர்ந் தெழுது
புவியைப் பார்த்து.

பூமி பதில்
புகழெ ழுதும்
உன்னைப் பார்த்து.

மெய் அறிவாய்
மெய் எழுத்தின்
மேன்மை இலக்கு

ஊமை யாகி
உனை நிறுத்து
உனக்குள் இருக்கு ...

எழுதியவர் : மீ.மணிகண்டன் (7-Oct-14, 4:11 am)
பார்வை : 80

மேலே