கவலை படுகிறது

காலை வாரும்
கபடி விளையாட்டு
அரசியலார்
ஆசிர்வாதத்தால்
தேசீய விளையாட்டென
தேர்வு பெற்று
பெருமையுற்றது.

மரமே மரத்தை
வெட்டக்
கோடாரியாவதுபோல்
ஆடுகளத்தில்
ஏமாறுவதும், ஏமாற்றுவதும்
காலை பிடிப்பதும்
மூச்சை விடவைப்பதும்

அரசியல், கபடி
இரண்டுக்கும்
பொதுவென்றாலும்
கபடியென்னமோ
தன்னோட பேரு
கலங்கப்பட்டதாய்
கவலை படுகிறது.

எழுதியவர் : கோ.கணபதி (7-Oct-14, 9:46 am)
Tanglish : kavalai padukirathu
பார்வை : 130

புதிய படைப்புகள்

மேலே