துணை

காட்டு வழிதனில் கற்களும் முட்களும்
நிறைந்ததொரு நீள் பயணம் மேற்கொண்டு
பெற்ற தாய் தந்தைதனை பிரிந்து வந்து
உற்ற துணை ஏதுமின்றி உழன்ற போது
கற்ற மனிதனாகக் காட்சிக்கு தெரியாமல்
சிறு புல்லிடையே தோன்றி அருகில் வந்தான்
நான் செல்லும் வழி கேட்டறிந்து
துணை வர விருப்பமென்றான்-அவன்
வரட்டுமென்று ஒப்பி விட்டேன் உடனே!
கைப் பிடித்து தூக்கிடுவான் கால்கள் இடறுமுன்னே!
மேடு பள்ளமது சொல்லிடுவான் புதுவழி போகுமுன்னே!
காய் கனி பறித்து பசி நீக்கிடுவான் மயங்கும் முன்னே!
கை விசிறி கொண்டு களைப்பை போக்கிடுவான் பின்னே!
நடந்திடவும் பலமிழந்து வீழும் முன்னே
தன் தோளிரண்டில் தூக்கி செல்வான் பின்னே!
கானகத்து விலங்கெதையும் கண்ணில் காண
பக்குவமாய் வேறு பக்கம் சென்று சேர்ப்பான்!
நல்ல மனம் கொண்டு துணையெனவே வந்தவனை
வாழ்நாள் முழுவதுமே வரச் சொன்னேன் எந்தன் உடனே !
சரியென்றான்..இன்று வரை துணை வருகின்றான்..!
நீ யாரென்றேன்..
கடவுள் என்றான்!

எழுதியவர் : கருணா (7-Oct-14, 12:55 pm)
Tanglish : thunai
பார்வை : 197

மேலே