பாடமான மாணவன்

பள்ளியில் கல்வி கற்கும் இளமாணவன்
பலருக்கும் பாடமாக காலனோடுப் போய்விட்டான்;

பிறர் பார்க்க வேடிக்கையென நினைத்தான்
பலர் பார்த்துப் பதறும் வபரீதமாகிப்போய்விட்டான்;

வெண்புலியோ, காட்டுப்புலியோ, காட்சிப்புலியோ அதன்
வன்குணம் மாறாது எனும் உண்மையைக் காட்டிவிட்டது புலி;

இடம்,முகம், பொருள் பார்த்து வேடமிடும் மனிதர்- தாம்
அறியாமல் எறிந்த வீச்சுக்கள் தான் அவன் மூச்சுக்கு முற்றானது.

அவன் உயிரழி(ளி)த்து தரும் பாடம்-

வேடிக்கைக்கு உணவாக உயிரினை(யி)விடாதீர்கள்;

வன்குணம் மறைக்க உண்டு, மகிழ்ந்து, உறங்கும்
முக்குணமுடைய விலங்கொன்றும் மனிதல்ல.

கேட்டு,கண்டு, பார்த்து தெரியும் இலவசக்கல்வியும்
பட்டுத் தெளியும் விலைமிகு கல்வியும் தரும் பாடம் ஒன்றேதான்;
பாடத்திற்கு நாம் கொடுக்கும் விலையில் தான் பேதம்.

விலை பொருளென்றால் பரவாயில்லை..உயிரென்றால்....?

எழுதியவர் : சுடரோன் (7-Oct-14, 1:57 pm)
சேர்த்தது : ஐ. ரமேஷ் பாபுஜி
பார்வை : 94

மேலே