பிரிவு

நொடிக்கொரு முறை
என்னவன் என்னவன்
என ஏங்கிய மனதிற்கு
என்ன சொல்வேன்
எப்படி சொல்வேன்
எனை விட்டு நீ பிரிந்து சென்றதை !!

எதற்காகவும் யாருக்காகவும்
கண்களில் நீர் கசிந்ததில்லை
இன்று ஏனோ
உன் பிரிவில் மட்டும்
உனக்கு சொந்தமான
என் விழிகள்
எனை மறந்து
என் கன்னங்களை
நனைத்து விட்டது !!

எழுதியவர் : யாதிதா (7-Oct-14, 3:56 pm)
Tanglish : pirivu
பார்வை : 78

மேலே