எழுத மாட்டேன் இனி ஒரு கவிதை உன் விழிகளே பேசட்டும்

பூங்கொடியினில்
வாசமாகி
உடன்
உன்னுள்ளில்
பூவாக உருமாறி ...
ஒற்றை பிடியில்
வாசமென வாழ்கிறேன்
நாளெல்லாம்
உன்னிளொரு தேனாக.....!!!
உன்னிரு
பொன்னிதழ்களோடு....
மௌனமென மரித்த
உன் வார்த்தைகளாயிங்கே
வற்றி போகட்டுமா ?
உன் கன்னக்குழியில்
இதழென படுத்துறங்கி ..
அதிலென் எண்ணத்தின்
அசைவுகளை எழுத்தென
எடுத்துரைக்கட்டுமா?
புன்னகை தெளித்து நீ ...
புதிதாய் கோலமிடுகிறாய் மனதோடு !
கண்ணிமை விரித்து நீ ...
களவாடி போகிறாய்
உயிரையும் கூட உன் விழியோடு !
உச்சி திரண்ட
உன் கார்மேக கூந்தலில்
பிச்சி மலர்ச்சரம் வைத்து
மணம் நுகர்ந்திட இனியேனும்
எனக்கொரு
யோகம் வாய்த்திடுமோ ?
இப்போதெல்லாம்
உன் விழிகள் பார்த்து
என் விரல்கள் பிடித்து
என் பேனா
உனக்காய் எழுத மறுக்கிறது ..!
உன் கண்கள்
புதிதாய் கவிகள் படைக்குதே...
அன்பே...எனக்கும் சேர்த்து !