சிறகில்லா பறவை
வளைத்துவிட
எவ்வளவோ முயல்கிறாய்
கீழ் இறங்காத வானத்தை
உன் காலடியில் வைப்பதற்காக .....
விடியல் நிரந்தரமானது என்பதை
மறந்துபோகிறது
விளக்கும் விட்டில்பூச்சிகளும்
அத்தனை ஆண்டுகள் ஆஸ்தியை
அனுபவித்த உனக்கு
அரை நொடி கசக்கிறது
இருட்டறை இல்லா இரும்புத்திரை
கடவுள் கூட
கும்பிடும் பக்தனுக்கு
கருணைகாட்டுவதாய் கேள்வி
நீ காட்சிகூட காட்டுவதில்லை
காலடியில் விழுபவனுக்கும் ...!!
உன் கால் அடியில் நிற்பதெல்லாம்
காவல் என்று
கணித்துக்கொண்டிருக்கிறாய்
அடிமைகள்
எப்போதும் வீரர்கள் ஆவதில்லை...
உன் எதிர் திசையில் நிற்பதெல்லாம்
எதிரி என்று எண்ணிக்கையை கூட்டுகிறாய்
உன் ஏளன சிரிப்புகள் எல்லாம்
கங்கணம் கட்டிகொண்டன கலிகாலத்தில் ...
பொதுவாழ்வு என்பது
புதுவாழ்வு இல்லை
அத்தனையும் அப்படியே
இழுத்துக்கொள்ள...
அதற்குத்தான் அன்றே
சொல்லிவைத்தார்கள் நன்மக்கள்
நன்றே செய் என்று...