எல்லைச்சாமி

அன்னையின்
அன்பு மடியமர்ந்து
ஆகாயம் பார்த்து
அன்னம் உண்டது
அணி திரும்புமா . . . .

வண்ணக் கனவுகள்
வாலிப மிடுக்கில்
வெட்டிக் கதையளந்து
வேளா வேளை திளைத்தது
வருமா இனி . . . . . . .

பின்னல் ஜடை
மின்னல் இடை
பெண்ணை ரசித்து
புருவம் உயர்த்திய
பொழுதுகள் திரும்புமா . . . . .

ஜன்னல் ஓரம்
வெந்நிறப் பற்கள்
வெடிச் சிரிப்புடன்
வேதனை தீர்க்கும்
வண்ண மழலைகள்
சின்ன முகம் என்று காண்பேன் . . . . .

வேல் கொண்ட விழிகள்
வேங்கையாய் தோள்கள்
வெள்ளிப் பனிமலையில்
வேட்டையனாய் நான் . . . . .

இறுகிய முகத்துல்
இன்முகம் தொலைத்து
இன்னும் புதைத்து
இங்கிருப்பதே சுகம். .
இறுமாப்பே என் அகம் . . . . .

எதிரியைத் தேடி
என் கண்கள் அலைய
என்னவொரு உற்சாகம்
ஏகாந்தம் தரும்
என் தாய்மண்ணின் மானம் காக்க . . . . .

வா என் எதிரியே
வஞ்சக நரியே. .
வெற்று சம்பங்களில்
வீண் வாதம் செய்பவனே. . .
வதம் செய்வேன் உன்னை . . . .

உன் உதிரக் கடலில்
உற்சாக நீச்சலிடித்து
உவகையில் களிக்கும்
உன்னத நேரம் காண
உறக்கம் தொலைப்பேனடா . . . . .

மாரி கால மேகங்கள்
மன்னவன் என்னிடம்
மண்டியிட்டு கிடக்கிறது . . . .
மதயானை உன்
மதம் தீர மருந்தளிப்பேன் . . . . .

தோள் திமிர் நடையிலுன்
தோலுரித்துக் கிழிப்பேன் . . .
பாருக்குள் சிறந்த
பாரதம் மிளிர்ந்து
பாங்காக வளர்ந்திடவே . . . . . .














*-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (7-Oct-14, 8:03 pm)
பார்வை : 648

மேலே