ஒரு வார்த்தை சொல்லிடம்மா
உன்னை நிழலாய் தொடர்கிறேன்
தினம் தினம் ரசிக்கவே
உன்சம்மதம் வேண்டினேன்
உன்னுள் வசிக்கவே
என் காதல் சிறகுகள்
உன்னால் பிறக்கும் கவிதைகள்
என் சாதல் நிமிடங்கள்
நீ கொள்ளும் மௌனங்கள்
என் காதல் கவிதைகள்
நீ பேசும் வார்த்தைகள்
தனிமை நிமிடங்கள்
எல்லாமே நரகங்கள்
ஒரு வார்த்தை சொல்லிடம்மா
வாழ்க்கை வந்திடுமா........
நீ வரும் வழியில்
என் மனம் உருகுதம்மா