கொடுத்த வைத்த குருதி - இராஜ்குமார்
கொடுத்த வைத்த குருதி
=========================
என் மனமே என்னிடம்
எதையோ எதிர்பார்த்து
ஏக்கத்துடன் எட்டு வைத்து
சுட்டு விரலை பிடித்தும்
சுகமாய் சுற்றி வருதடி
உன் பார்வைப்பட்ட
பாதையின் பரப்பை
பாயளவாய் விரித்தும்
தலையணை கிடைக்காத
தருணத்திற்கு தண்டனை என்ன ..?
பெண்ணே ..
அடிபட்ட எனது விரல்
அவசரமாய் சொட்டிய
துளிகள் தாளில் எழுதிய
வார்த்தையின் வடிவம்
உந்தன் பெயராம் ...
பாரேன் - குருதி கூட
கொடுத்து வைத்துள்ளது
- இராஜ்குமார்
நாள் : 08 - 07 - 2011

