பெற்ற பாசம்

பெயர் சொல்ல..
பெற்றெடுத்தேன்..

எனக்கென்று - ஒரு
மகனாய்..

மார்போடு..
அணைச்சு வச்சேன்,

பெயர் சொல்ல - வாழ
சொன்னேன்,

மூத்தவங்க,
மரபையெல்லாம்..
முன்னோருங்க,
சொல்லித்தர..

மூன்று,
தலை முறையாய்..
மூளைக்குள்ளே வச்சிருந்து..!!

உறக்கத்து,
கதையாய் சொல்லி..
உரம் போட்டு வளர்த்துவிட்டேன்..!!!

என்னைப்போல..
இருக்க வச்சேன்..

உழவு புடுச்சு..
உண்ண சொன்னேன்..!

"வியர்வை" போகிடுச்சாம்...

வியாக்கியானம் பேசி வச்சு..
பள்ளிக்கூடம்..
போறேன் என்றான்..

அசட்டை செய்யாது,
ஆச்சர்யம் இல்லாது,

"பள்ளிக்கூடம்" போகிடத்தான்..
வாழ்த்து சொல்லி..
அனுப்பி வச்சேன்ன்..

படுச்சவங்க எல்லோரும் - என்
பாட்டன் "வாழ்ந்த வாழ்கை" அதை
பாமரன்னு சொல்லிவச்சான் - என்
முப்பாட்டன்..
வாழ்ந்து ஏனோ..
போர்க்களத்து துயர் துடைத்தான்..!!

"அ" வென்று,
சொல்லி வைத்தான்.

ஆச்சர்யம் என்ன இருக்கு..

சாப்பிடும் போது தானே
"ஆ" சொல்லி..
வாய் பிளப்போம்.

ஒன்று, இரன்று, ஓராயிரம்..
சொல்லிக்கொண்றே போனாலும்..

"எண்" என்ற வார்த்தையில் தான்
அத்தனையும் அடங்கிடுச்சே..

மகன் பேரு..
நிலைத்து நிற்க,

ஓராயிரம் பேர்..
சொல்லி வைக்க..

"என்" என்ற,
வார்த்தை சொல்லி..

"ஆ" என்ற,
உணவு தந்தேன்.

மூக்கனாங்கயறு கட்டி..
மூச்சு முட்ட..
தின்னு புட்டு,

மூளை முடுக்கு சுத்தி வந்து..

மூணு வேலை..
சோறு போடும்,
பசு மாட்டு மந்தை கூட..
பாசத்துக்கு அடிமைதாங்க..!!

மூச்சிறைக்க..
உழைத்து தந்து,

மூச்சுமுட்ட தின்ன வச்சு..

மூளைக்கு,
அறிவை ஊட்டி..

மந்தை கொசு..
கடித்திடாம..
பார்த்துக்கொண்ட
படிச்ச பய..!!

நட்ட நாடு சாமத்துல..
முன் பின் தெரியாம..

முழு நோட்ட வீசிபுட்டு..
பர தேசம் போயிபுட்டான் - என்ன
பார்க்க ஒரு நாதி இல்லை..
முதியோர் இல்லத்துல.

ஏடெடுத்து படுச்ச பைய..
போயிட்டானே ஏமாத்தி.( சீனி)

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (9-Oct-14, 2:09 am)
Tanglish : petra paasam
பார்வை : 88

மேலே