அரையிறுதி வெற்றிக்கு அர்ப்பணிக்கிறேன்!

நல்லுறவு நாம் பேண
நடிகனோ நீதிமானாய்
புல்லுருவி போலிருந்து
புத்தியின்றி கூறிவிட்டான்

சுதந்திரமாய் கருத்திடலாம்
சோறுண்ட தாய்நாட்டில்
வேற்று நாட்டு வீரர்களின்
விளம்பரத்திற்கு நடிகனாய்

நெற்றி பொட்டில் ஒத்த காசு
நிலையில்லாதது நடித்த காசு
கோவணத்தில் இருக்கும்போது
கூவிவிட்டான் சாவின் சங்காய்

இந்த நாட்டில் மண்ணில் இருந்து
இறக்கும்போதும் மரித்து கிடந்து
மதத்தால் மட்டும் மனிதம் பிரித்து
மற்ற நாட்டின் பெருமை பேசி

இருக்கும்போது துரோகியெல்லாம்
இனியாவது திருந்தி விடுங்கள்
காரி எனக்கு வருவதில்லை உன்மேல்
கவிதையாக நான் துப்பிவிடுகிறேன்

விளையாட்டு இனியும் விளையாட்டே
வெற்றி தோல்வியும் ஒருமைபாட்டே
தோல்வி தொடர்தான் உனக்கு துரோகி கூட்டே
துடிக்கும் இதயம் என் இந்திய நாட்டே
எதிரியின் வெற்றிக்கு இனி நீ காட்டே (ன்)
இணைந்திருக்க தடையில்லை பாகிஸ்தான் எல்லை கோட்டே


எழுதியவர் : . ' .கவி (31-Mar-11, 11:05 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 384

மேலே