இறையாண்மை என்பது யாதெனில்?

இந்நேரம் ஓர் தமிழன்
இந்தியா தோற்கும் என்றும்
எதிரிநாடு வெற்றி பெறும் என்றும்
மேம்போக்காய் கூறிவிட்டால்
மிரட்டிவிட்டன் இறையாண்மையையென்று
கூப்பாடு போட்டிருப்பார்
கொடும்பாவி எரித்திருப்பார்
சட்டம்கூட கைவிலங்கை
சட்டென்று போட்டிருக்கும்
மானம்கெட்ட மக்களாட்சியில்
மண்ணின் மைந்தரெல்லாம்
மறப்பதும் மன்னிப்பதும்
மலையாள திரைகதையாய்
மார்பை திறந்து காட்டும்போது
பொறுக்கவில்லை என் நெஞ்சே
பூகம்பமாய் வெடிக்கிறதே
தமிழ் துரோகியாய் கவர்ச்சிகாட்டி
தன் நடிப்பால் இலங்கையை கூட்டி
விற்றுவிட்ட தன்மானத்தை
விலைகொடுத்து வாங்குமுன்னே
ஓர் நடிகைக்கு என் உழைப்பில்
உருப்படாத செலவை செய்ய
இந்தியாவிற்கே எதிராக
இப்படியா கருத்து சுதந்திரம்
இப்போதுநான் இறந்துவிட்டாலும்
இன்னொருமுறையும் இறந்துபோவேன்

எழுதியவர் : . ' .கவி (31-Mar-11, 1:24 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 494

மேலே