காதல் வழி

காண்பதும்
கண்டபின் கவர்வதும்...
கவர்வதும்
கவர்ந்தபின் சேர்வதும்...
சேர்வதும்
சேர்ந்தபின் பிரிவதும்...
பிரிவதும்
பிரிந்தபின் மனம் எரிவதும்...
எரிவதும்
எரிந்தபின் ஏங்குவதும்...

ஏக்கத்தின் தாக்கம், மீண்டும் "காண்பதில்" கரையேற,
இந்த காதல் வழி, உண்மையில் ஒரு பெரும் சுழியே...

எழுதியவர் : மயில்வாகனன் (9-Oct-14, 3:51 pm)
சேர்த்தது : மயில்வாகனன்
பார்வை : 104

மேலே