முதியோர்களை புதியோர்களாக எண்ணுவோம்

அன்று உள்ளே
இன்று வெளியே

அங்கு சொர்க்கம்
இங்கு நரகம்

முதல் வார்த்தைகளுக்கு மதிப்பு
முடிவில் வார்த்தைகளுக்கு மிதிப்பு

பாசத்தை தொலைக்கும் ஓர் ஜீவன்
பாசத்தை தேடும் ஓர் ஜீவன்

பார்த்து பார்த்து வளர்க்கும் பிள்ளை
பார்க்காமல் போகும் காலமிது

பட்டம் பெற்றார்கள் பெற்றோர்களாக
பதவி இழந்தார்கள் முதியோர்களாக

முதியோர் இல்லங்களில் சேர்க்கிறார்கள்
அரண்மனை கூண்டு கிளி போல அவர்களை

கல்லுடைத்து வளர்த்த தந்தையை
விட்டு செல்கிறார்கள் கல்லு மனம் போல


பந்தங்களை அறுத்து எறிகிறார்கள்
பந்தற்கால் போல

தங்களுக்கு நல்ல துணி
தாய்க்கும் தந்தைக்கும் பிஞ்ச துணி

பேரப் பிள்ளையை கூட
பார்ப்பதற்கு -கைதி போல
அனுமதி கால அவகாசங்கள்

கவலைகள் மறந்து
கண்ணீரை துடைத்து
கர்வம் கொள்கிறார்கள்
நாம் பெற்ற புதல்வர்கள் என்று

முதுமை வந்தோன
பழமை என நினைத்து
அவர்களை பதற விடும் -இச்
சமுதாயத்தில்

முதியோர்களை
புதியோர்களாய்
எண்ணி வாழவைப்போம் !


முதியோர்களை புறம் ஒதுக்காமல்
அவர்களை பாதுகாப்போம் !!

எழுதியவர் : கீர்த்தனா (9-Oct-14, 4:03 pm)
பார்வை : 146

மேலே