உன்னிலும் நடந்திடும் ஒரு நாள்
வலிகளை வரிகளால்
சொல்ல முடியாது
கண்களின் வார்த்தைக்கு
மொழிகள் கிடையாது
உன் மௌனத்தை மிஞ்சிட
தனி ஒரு தடை ஏது
பகல் கனவுகள்
விடிந்ததும் காண முடியாது
காதலில் பொய் என
நிஜமென எதுவும் கிடையாது.
உணர்வால் ஒரு நொடி
உணர்கின்ற தருணத்தில்
உன்னிலும் ஒரு நாள்
காதல் பூக்கும் .........