அவனின் திருமண செய்தி
தொகை மயில் ஆடி வர -அதன்
அழகில் மணிக்குயில் பாடி வர
சங்கதி சேர்த்து புறா தூது வர
என்னவனின் கைபட்டு செய்தி உடைந்து விழ
அதை கரங்கள் ஏந்தி விட
மனதில் அது புகுந்து விட
என் நினைவு அவன் அருகில் வந்து விட
எனை மறந்த அவன் விழிகள் குடைந்து செல்ல
விழியோரத்தில் நீரலைகள் உறைந்து விழ
நம் கூடல்கள் திரையில் விழ
எனை அணைத்த கைகள் உதறி விட
வார்த்தைகள் இன்றி தடுமாறி விட
வாஞ்சைகள் செய்யாமல் கிழே குனிய
உதடுகள் உதறத் தொடங்க
கண்கள் சிவக்கத் தொடங்க
கால்கள் நடுங்கத் தொடங்க
வந்த புறாவிடம்
கறுத்த துணியில் தூது விடுகிறாள்
வெள்ளைத் துணி அணிந்து வருவேன்-என்று
என்னவனின் திருமண வைபவத்துக்கு ,,,,,,,,,,,,,,,இன் முகத்தோடு ,,,,,,,,,,