கவிதையும் நீயே -நாகூர் லெத்தீப்

மனதிற்குள்
தோன்றி
காவியம் நீயே
கவிதையும் நீயே............!

கற்பனைக்கு
எட்டாத உருவமும்
நீயே - எனது
உணர்வும் நீயே.........!

பார்வைக்குத்
தெரியாத இருளும்
நீயே - புது
விடியலும் நீயே........!

உயிருக்கு
தெரியாத உடலும்
நீயே - எனது
உள்ளமும் நீயே..........!

அறிவுக்கு
விளங்காத
அற்புதம் நீயே
அதிசயமும் நீயே........!

எழுத்துக்கு
தெரியாத
இலக்கணம் நீயே
புது பாடலும் நீயே........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (11-Oct-14, 1:10 am)
பார்வை : 91

மேலே