முன்மாதிரி
இளைப்பாற நேரம் ஒதுக்காமல் எனக்காய் உழைத்தாய். முதல் தோழனும் நீ தான், முன்மாதிரியும் நீ தான். கை பிடித்து நடை கற்றுத்தநதாய், உன் கால் பிடித்துவிட நேரம் இன்றி தவிக்கிறேன். உன் பெயரை என் பெயரோடு சேர்த்துக்கொண்டேன் எவள் வந்தாலும் என்னோடு உன்பெயர் தான் தந்தையே. என் வயிறு பசித்து நான் அழுததில்லை என் நினைவு தெரிந்த நாள் முதலாய். உன் போல் நண்பனிருந்தால் கவலை பற்றி எண்ணத் தேவையில்லை.