உன் நினைவை சுமக்கும் தாய்
இரங்கல் செய்தி என்னை அடைந்தது இரண்டாவது வருடமாக - உன் சட்டையை
இறுக்கி பிடித்து அழுகிறேன் ஒரு ஊமையை போல
உன் வீட்டை கடக்கும் போதெல்லாம் ஜன்னல் பின்னால் உன் சைகை
கண்ணெதிரே நிழலாடுகிரது
நீ காத்திருந்த பேருந்து நிறுத்தம் பித்து பிடித்து போனது
சுகத்தை மட்டும் நீ எடுத்துக்கொண்டு சோகத்தை
எனக்கு தந்துவிட்டாய்
உன் நினைவை சுமக்கும் தாயாகவே காலம் நகரட்டும் உன் கல்லறை நோக்கி !!