கல்வியடிமைகள்
ஆசிரியர்களின்
அரக்கக்கைகள்
குழந்தைகளின்
குரல்வளையை
நெறிக்கும்
பாடத்திட்ட
பானங்களோடு
போர் நடத்தியை
முறிந்துவிடும்
எங்கள்
இளைமை வில்
மார்க்
அட்டைகளோடு
மாரடித்துவிட்டு
திரும்பி வருகையில்
இறந்து கிடக்கும்
இருபத்தையிந்து வயது
இளமை
ஓடுகின்ற
நேரத்தில்
காலை ஒடித்துவிட்டு
முதுமை பருவத்தில்
முதல்பரிசு
வாங்கி
என்ன செய்ய
நிச்சயமில்லாத
சொர்க்கத்திற்கு
நிஜ வாழ்க்கையில்
ஏன்
நரகத்தில்
அடைக்கிறேர்கள்
வாழ்க்கை போரில்
வெற்றி பெற
வெறும்
அட்டகத்தி
கொடுத்து
அனுப்பி வைக்கிறீர்கள்
இங்கு எதுவுமே
விருப்பத்தால்
கிடையாது
எல்லாமே
கட்டாய தினிப்புதான்
தேர்வில்
மூன்றுக்கு
இரண்டு வினாக்கள்
எங்கள் தேர்வு
ஆனால்
தேர்வுகள்
எங்கள்
தேர்விலில்லை
ஒன்று
புதைந்து
சாக வேண்டும்
அல்லது
எரிந்து
சாக வேண்டும்
ஆனால்
சாவு நிச்சயம்
திறமைகளை கூட
கல்லூரியின்
காகித கட்டுகளே
தீர்மானிக்கின்றன
எரிமலை
தூக்கும்
எங்கள் கைகளில்
பேனா கொடுத்து
பிடித்து தள்ளுகிறீர்
பரிட்சை
அறையில்
உருப்படாத
தேசம்
உண்டாவது
எங்களால் அல்ல
உங்களால்தான்
முதல் வகுப்பு
தொடங்கும் போதே
எழுதப்பட்டு விட்டது
எங்கள் மீதான
அடிமை சாசனம்
இதில்
சுதந்திரமென்ன
பெரிய
சுதந்திரம்