நான் தாசி

நான் இதயமற்றவள்...
இரவை மட்டும் நுகரும்
ஈசல் ஜாதி. . .

ஏற்றத்தாழ்வுகள் பார்ப்பது
பண்பில்லை என்றாலும்
இரைந்துகிடக்கும் மணலுக்கும்
முத்துக்கும் பேதம் அறிவேன். . .

இதோ
என்னை உரசிடும் காற்றும்
எந்தவிதத்திலும் ஆணாய்
இருக்க அனுமதியேன். . .

இங்கே
பெண்ணாய் பேசுவதில்
பெரும் துணிச்சல் கொண்டவள் நான். . .

அத்தனை உறவிருந்தும்
அனாதை ஆக்கப்பட்டவள்
அக்கிரம தோரனையால்
அலங்கரிக்க படுகிறேன். . .

பிறப்பிலும் பற்றில்லை
வளர்ப்பிலும் வரைமுறையில்லை. . .

நிர்கதி ஆக்கப்படவில்லை நான்
நிறையாத ஆசை
நிறைய இருந்ததால்
நினைத்தே நுழைந்து விட்டேன்
இந்த நாற்றத்தில். . .

நான் துறந்த
துயிலுக்கெல்லாம் காரணம்
துணையின்றி துரத்தி வந்த
தற்காலிக துணைகள் தான். . .

தாம்பத்தியம் மட்டும்
தெரிந்த எனக்கோ
திருமண ஆசை
தூர்ந்தே விட்டது. . .

பசி அறியா வயிற்ருக்கு
பிள்ளை சுமக்க பாக்கியம் ஏது. . .

தாதியாக இருந்திருந்தால்
தாலி தொட்ட தகுதியோடு
தலை குனிந்து வாழ்திருப்பேன். . .

தலை நிமிர்ந்த
தலை எழுத்தால்
தாசியாக நிற்கின்றேன். . .

எழுதியவர் : கல்பனா ரவீந்திரக்குமார் (11-Oct-14, 2:52 pm)
பார்வை : 116

மேலே