என் காதல் --போட்டிக் கவிதை

என் கண்ணில் --அவள் முகம்
விதையாய் விழுந்த நொடியில்
முளைக்கத் துவங்கியது
என் காதல் .....................

ஏணிப் படியில் ஏறத் துவங்கிய
என் காதலுக்கு ,
முதல் அடியிலேயே முட்டுக் கட்டை விழ
முடிந்துவிட்டது என நான் நினைக்க --அவளின்
முனகல் சத்தம் கேட்டு
முந்திச் செல்கிறது என் கால்கள்
முதல் படியை பார்த்து
முறைத்துக் கொண்டே ..........

காயம் பட்ட என் மனதும்
காணாமல் போனதற்கு
காரணமும் --அவள்
கண்கள் தானே ...................

விடிவெள்ளி அவளை நினைத்து --நான்
விடிய விடிய காத்துக் கிடக்க
மலையைக் கடக்கும் காற்றைப் போல
மயக்கம் தந்து போகிறாளே ..............

என் இதழும் அவளிடம் பேசும் நேரம் வந்தால்
என்ன பேசும் என்பதை
படித்துக் கொஞ்சம் பாருங்கள் ..............

செவ்விதழ் மொட்டே
செந்நிற பட்டே
பாடி ஆடி உன்னைத் தேடி
ஓடி வந்த என்னை --

வேடிக்கையாய்ப் பார்த்து நீ
வெகு தூரம் செல்கிறாயே --என்னில்
வேதனையைப் பொழிகிறாயே ...............

கோடிப் பணம் கொடுத்தாலும் --துளி
குறையாத உன் புன்னகையில்
கண் விழிபிதுங்க வைத்தாயே ...........

மாடி வீட்டு மெத்தையிலே --நீ
நின்று சிரிக்கையிலே --என்னில்
கோடிப் பூக்கள் மலருதடி
வாசம் பல வீசுதடி ..........................

அழகான ஆப்பிள் பெண்ணே --உன்
அன்பொன்றைத் தருவாயா ?--இல்லை
விழியாலே என்னைக் கொன்று
விலகி நீயும் செல்வாயா ?..............

வெகு தூரம் கடக்கும் --உன்
விழிப் பார்வையிலே --
ஒரு ஓரமாய் நிற்கும் --என்
ஓவியம் படவில்லையா ?...............

சிநேகிதியே --உன்
சிரிப்பினிலே --என்னை
சிகரம் தொட வைக்கிறாயே .............

பாலைவன மணல்மேடும்
பாவை உன்னைப் பார்த்ததினால்
சோலையாக மாறுதடி --தன்
சோகம் இழந்து போகுதடி....................

எதையோ நீ நினைக்க
அதை எண்ணி நான் தவிக்க
கூடி நிற்கும் தோழி எல்லாம் --உன்
காதில் ஏதோ கிசுகிசுக்க
காற்றினிலே கரையுதடி
கல்லாய் இருந்த எம் மனசு .............

பாய்ந்தோடும் கங்கையும் --உன்
பக்கம் வரத் துடிக்குதடி --தன்
பாவம் போக்க நினைக்குதடி .....................

முன்பின் தெரியாத
முகம் பார்க்கும் கண்ணாடி கூட
நான் சிரித்தால் சிரிக்குதடி
நீ மட்டும் ஏன்
முகம் சுளித்துப் போகிறாய் ...................

கண்டவர்களும் கிழித்தெறிய --வெள்ளைக்
காகிதமா என் காதல்
காணாமல் காணத் துடிக்கும் --உன்
கண்களாலே கவிழ்ந்தேனே தேனே....................

வேறு என்ன வேண்டும் எனக்கு --உன்
கண் அசைவு போதுமே
சரி என்று சொல்லிப் பார் --நான்
சரணடைகிறேன் உன்னிலே ..................

சாதியையும் கடந்து
காதலிப்போம் வா பெண்ணே
சாதனையும் புரிவோம் --நம்மை
வெறுக்கும் கண் முன்னே...........

காலத்தின் கடைசி நொடியும் --உன்னைக்
கரம் பிடித்தப் பின்னும் கூட --என்
காதல் அன்பு மாறாது ............

எளிமை வரிகள் என் வரிகள்
எழாமலே எழுதுகிறேன்
எழுந்து நடக்க உதவி வேண்டும் --அதற்கு
என்னவளே நீ வர வேண்டும்
என்னுள்ளே இணைய வேண்டும்--அது
எழு பிறப்பும் நிலைக்க வேண்டும்........................

எழுதியவர் : ஜேம்ஸ் (11-Oct-14, 4:22 pm)
பார்வை : 105

மேலே