காதல்
கண்களை திறந்தேன், அவளின் முகத்தின் ஒளி தெரிந்தது,
எழுந்து அமர்ந்தேன், அது முகம் அன்று மின்மினி என்று,
அவளின் நினைப்பில் என்னை சுற்றியது,
வானை நோக்கினேன், கரு மேகங்கள் கலைந்து போனது,
கைகளை கிள்ளினேன், நிஜம் என்று புரிந்தது,
மறுபடியும் கண்களை மூடி திறந்தேன்,.
எதிரில் அவள் முகம், உன்னை காதலிக்கிறேன் என்ற உதடுகளோடு.....