அனுபவக் காதல் - இராஜ்குமார்

அனுபவக் காதல்
================
ஆழமான அன்பை
அவள்(ன் ) அடிக்கடி
அலட்சியப்படுத்திய பின்பும்
மீண்டும் ...
அதையே அழகாய்
ரசிப்பதே எந்தன்
அனுபவக் காதல்
அக்கறையில்லா தருணத்தை
அக்கறையோடு பறித்து
புல்வெளி மேலே
புன்னகைப் புரியும்
பனித்துளியில் பதுக்கி
வைக்கிறேன் என் காதலாய் ..!
- இராஜ்குமார்
நாள் ; 10 - 12 - 2012