காதல் ரோஜா
காதலித்தவன் கல்லறையில் - இவனைக்
காதலிக்கத் தூண்டியவள் மணவறையில்.
காதல் பள்ளியில் பயில வந்தவள் - இவனைக்
காதலால் கொலை செய்து - அடுத்தவன்
கரம் பிடிக்க கண்வழியே சம்மதம் சொன்னாள்
அவள் காதலை நம்பியவன் - கல்லறையில்
அனாதையாய் உறங்குகின்றான். - அவனுக்காக
அழகு காதல்ரோஜா அவன் கல்லறையில்
அழாமல் ஆழமாய் - புதிய வாழ்க்கையில்
அடியெடுத்து வைக்க அவனதுக் கல்லறையில்
ஆசிப் பெற்று செல்கிறது.