உணர்வுகளை உச்சரிக்க தேவையில்லை - இராஜ்குமார்
உணர்வுகளை உச்சரிக்க தேவையில்லை
========================================
ஒவ்வொரு வரியிலும்
வார்த்தை வலியாய்
பிரதிபலிக்க காரணம்
கண்ணில் பதிந்த
சமூக அலட்சியம்
அதோடு கைகோர்க்கும்
மனித மன அவலமும்
உணர்வுகளை
உச்சரிக்க தேவையில்லை
உணர்ந்தாலே போதும்
மனிதம் தானாய் மலரும்
மண்ணிலும் மனதிலும்
- இராஜ்குமார்
நாள் ; 10 - 12 - 2012