காதலா நட்பா
சில நிமிடங்களுக்கு முன்
நண்பனாயிருந்த அவன்
இப்போது காதலனாய் என்
முன் நிற்கிறான்
நண்பனாய் ஏற்ற அவனை
காதலனாய் ஏற்க என்
மனம் மறுக்கிறது
அவன் முகம் பார்க்க
எனக்குள் கொலை நடுக்கம்
ஏனெனில் அவன் விழிகளில்
எனை நோக்கி ஆயிரம்
ஏவுகணை கேள்விகள்
அவன் கேள்விகளுக்கு எனக்கு
விடை தெரியாது
என் கண்கள் கண்ணீர் சொரிய
ஆரம்பித்து விட்டது
நம் நட்பை கலங்கப்படுத்த
அவன் மனதில் தோன்றிய
காதல் கண்டு அந்த வானும்
பொறுக்கவில்லையோ என்னவோ ?
வானும் சோவென கண்ணீர்
சொரிய ஆரம்பித்து விட்டது
அவன் என் முகம் நிமிர்த்தி
சொல்கிறான் " பார் என்
காதலை வானும் ஏற்று நம்
மேல் பூமழை தூவுகிறது
நீ என்ன சொல்கிறாய் "
இந்த மழை அவன் காதலின்
சம்மதமா ? இல்லை எம்
நட்பு கலக்கமடைந்த சோகமா ?