அவளது முகவரி

தினமும்..
என்னை கடந்து வேகமாய்
வாகனத்தில் அவள் ..!
ஒரு நாளேனும் அவள் முகம் காண
ஏங்கினேன்..அவளை பற்றிய
கனவுகள் வருவதற்கு
பகலிலும் தூங்கினேன் !
அவள் முகவரி
அறிந்திட பின் தொடர்ந்தேன்..
இறுதியில் ..
அவள் முன்னால்
போய் நின்று
ஒரு நாள்
உற்றுப் பார்த்தேன்..
அவள் முக வரிகளை..!
ஐயோ!
அந்தம்மா வயது
இருக்கும்..
ஐம்பதுக்கு மேலே!