விநாயகர் சதுர்த்தி

பத்து ரூபாய்க்கு ஒரு பிள்ளையார் என்று

பேசி வைத்தக் குயவனின் இடைக்கையில் இடப்பட்ட

வியர்வை உரியப்பெற்ற அந்த கசங்கிய நூறு ரூபாய்த் தாள்..




சிலைக்கு கண் வைக்கப் பிராய்ந்து எடுக்கப்பட்ட

இடுகாட்டு பக்கமுள்ள மரங்களில் ஒட்டுண்டு வாழும்

கொடிகள் உதிர்க்கும் சிவப்பும் கருப்புமாய் ஆன குதிரமணிகள்..




அழகாய் மாலை அணிவிக்க எளிதில் கோர்த்துவிட பறிக்கப்பட்ட

முதியோர் இல்லத்தில் மூதாட்டி போல

எவராலும் கண்டுகொள்ளப்படாத எருக்கம் செடியின் மலர்கள்..




விக்ரகத்துக்கு வண்ணம் தீட்ட பக்கத்துவீட்டில்

பள்ளியில் படிக்கும் சிறுவன் நேரம் கழிப்பதற்காக

வண்ணம் பூசி மகிழப் புதியது கிடைத்ததும் தூக்கி எறியப்பட்ட

பழைய வாட்டர் கலர் டப்பாவில் தேறிய வன்னத்துகள்கள்...




இப்படி இங்கும் அங்குமாய் எல்லாம் சேர்த்தெடுத்து

எப்படியும் ஒரு பிள்ளையாரை இருபது ரூபாய்க்கு விற்று

இந்த வருடமாவது தங்கைக்கு பாடப் புத்தகம் வாங்கிவிட எண்ணிய....



எனது தெருவில் வாழும் மைகேல் என்னும் ஒரு எழைச்சிருவனை மகிழ்விக்க

அவனிடம் ஒரு பிள்ளையாரை சற்றும் யோசிக்காமல் வாங்கிய

-என் கறுப்புச் சட்டையை

முறைத்து முறைத்துப் பார்த்து முனுமுனுத்தனர்...

சாப்பிடாவிட்டாலும் அன்று மட்டும் கடைதெருவில் விற்கும்

விளாம் பழங்களை வாங்க வந்தவர்கள்...

எழுதியவர் : கருனபாலன் (13-Oct-14, 1:15 pm)
சேர்த்தது : கருனபாலன்(தீபக்)
பார்வை : 220

மேலே