ஆராதனா

(ஆ)ராதனைகுரியவள் நீ ஆராதனா
(ரா)த்திரி நிலவு உன் அழகிய முகம்
(த)ங்கமே என உன்னை எப்படி அழைப்பது,அதுக்குதான் விலை உண்டே
(நா)ங்கள் மகிழும் மகிழ்ச்சி நீதான், ஆராதனா
(ஆ)காய நட்சத்திரங்கள் உன் அழகிய சிரிப்பு
(ரா)ஜாவீட்டு கன்னுக்குட்டி, என் செல்லகுட்டி
(த)வமாய் தவமிருந்து ஈன்ற பொக்கிஷம் நீ
(நா)ன் முழுகாமல் பெற்றெடுத்த முத்தல்ல, வரம் நீ ஆராதனா

எழுதியவர் : ஜெயா (13-Oct-14, 12:52 pm)
சேர்த்தது : ஜெயா
பார்வை : 121

மேலே