வண்ணத் தொலைகாட்சி

எங்கோ புறப்படக் கிளம்பி அமர்ந்துவிட்டேன்...

திரும்பி வந்தும் உடை மாற்ற மறந்து விட்டேன்..




பசியிலும் உணவை மறந்து விட்டேன்..

பருக்கைகள் காய்ந்தும் உண்ட கை கழுவாது இருந்துவிட்டேன்..




உன் வண்ண வியுகத்துள் விழுந்துவிட்டேன்..

ஒரு விரலால் உனை இயக்கி உடல் முழுக்க மறுத்துவிட்டேன்..




கண்கள் நொந்தாலும் மூளை விடுமுறை எடுத்தாலும்..

வாழ்வே தொலைந்துவிடும் என்று தெரிந்தும்....




உன்னையே காணச் செய்கிறாயே....

அப்படி என்ன தான் செய்துவிட்டாய் என்னை???




என் அன்புக்குரிய தொலைக்காட்சியே!!!!

எழுதியவர் : கருனபாலன் (13-Oct-14, 1:20 pm)
சேர்த்தது : கருனபாலன்(தீபக்)
பார்வை : 135

மேலே