வரலாற்றில் இன்று

களைப்பு இல்லாமல்
பேருந்தில் இருந்து இறங்கி..
வாடகைக் கார் ஒன்றை அழைத்தான்..
ஆதவன்..
பணிந்து வந்து ..
புன்னகைத்து ..அழைத்து வந்தார்.. காரோட்டி!
மீட்டர் பணம் பெற்றுக் கொண்டு
வீட்டில் இறக்கி விட்டார்..
வழியில் எங்கும் போஸ்டர் இல்லை..
கட்சிக் கொடிகள் இல்லை..
பேப்பரை பிரித்தான்..
வரலாறு பகுதிக்குத் தாவினான்..
அங்கே துணுக்குகளாய்
சில செய்திகள்..
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்..
என்ற தலைப்பில்..
அச்சடிக்கப்பட்டிருந்தன..சில வரிகள்..
அவை................
"கொலை..கொள்ளை..
சாதிச் சண்டை..
துப்பாக்கி சூடு..
லஞ்சம் ..ஊழல் ..
கற்பழிப்புகள்..
மின் வெட்டு ..
நதி நீர் பிரச்னை..
போர் செய்திகள்..
இலவசங்கள்..
இனப் படுகொலைகள்..
மதக் கலவரங்கள் ..
மதுக் கடை ஏலங்கள்..
ஆயுத போட்டிகள்..
அரசியல் பழி வாங்கல்கள்..
இவையெல்லாம்
அன்றாட நிகழ்ச்சிகள்
அன்றைய உலகிலே..
இன்றைக்கு நூறு
ஆண்டுகளுக்கு முன் "
என்பதுதான்..
இன்று இவை ..
எதுவுமே இல்லையே..
எப்படித்தான் வாழ்ந்தார்களோ..
நம் முன்னோர்கள்..!
என்று வியந்தான்..
காலண்டரை பார்த்தான்..
14.10.2114
சிரித்துக் கொண்டான்..!

எழுதியவர் : karuna (14-Oct-14, 6:02 pm)
Tanglish : varalatril indru
பார்வை : 201

மேலே