மனிதன்

எங்கிருந்தோ
பல கண்டங்களைத் தாண்டி..
பறந்து வந்து
எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்தன..
இரு பறவைகள்..
அவைகளின் இனிய ஒலியில்
உறக்கம் கலைந்து எழுந்து
மாடிப் படிகளில் ஏறினேன்..
அவற்றை நெருங்கினேன்..
இரண்டும் சிரித்தன..
என்னைப் பார்த்ததும்!
ஒன்று மட்டும் தமிழில் பேசியது..!
இன்னொன்றைப் பார்த்து..
நான் சொன்னேனே..அவன் ..
இதோ..வருகிறான் .. இவன் ஒரு
மனிதன்..இந்தியன்..
நம்மைப் போல் இல்லை இவன்..
வேற்று மொழியை பிடிக்காது..
வேற்று மாநிலத்தைப் பிடிக்காது..
வேற்று மதத்தையும் பிடிக்காது..
வேற்று சாதியையும் பிடிக்காது..
சாதி சொல்லி சமத்துவம் பேசுவான்..
மதம் வளர்க்க யாத்திரை செல்வான்..
மதசார்பு அற்றவன் என்று பேசி திரிவான்..
அண்டை மாநிலத்து பஸ்ஸை கொளுத்துவான்..
ஆனாலும் மாலை மரியாதை பெறுவான்..
இவன் சுதந்திரமானவன்..
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று
சுதந்திரமாக வாழ்பவன்...
கட்சிகள் மாறுவான்..அவனைப் பற்றிய
காட்சிகள் மாற்றுவான்..
நட்ட நடு வீதியில் கூட்டாக
கொடுமைகள் செய்வான்..
இவன் பேர் மனிதன்..!
வா .. போகலாம் என்று
சொல்லிய பின் .. சிரித்துக்கொண்டே
பறந்தன அந்த பறவைகள்..!

எழுதியவர் : karuna (14-Oct-14, 5:12 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : manithan
பார்வை : 122

மேலே