பாதையும் பயணமும்-வித்யா
பாதையும் பயணமும்.....!!-வித்யா
என் பயணப்பாதைகள் யாவும்
எனக்கானது அல்ல..........
எடுத்துக்கொள்ள
பயணங்கள் தொடர்ந்த
பாதையோ
பாதைகள் கொடுத்த
பயணமோ
நானுமொரு பயணி
என்பதான எல்லைக்குள்
பாதைக்கும் எனக்குமான
பந்தம்......!
அந்தத் தெருக்களுக்கெல்லாம்
என் பெயர் தெரியும்
எனக்குத் தெரிந்தது போலவே......!!
வழியனுப்பி
வரவேற்று
என்னோடு நடைபோடும் அவற்றின்
பயணங்கள் பெரும்பாலும்
எனதறை வாசல் வரையே நீள்கிறது....!!
இன்றைய பயணத்தில்
இதயம் வருடும்
புது உறவு.........
தெருவில் விடப்பட்ட
அந்தக் குட்டிதேவதையைத்
தத்தெடுத்துக் கொண்டேன்
அந்தப் பாதையோர முள்வேலியில்..........!!
===மிக்கி..... பேர் நல்லா இருக்கா...........??