ஆச்சிரியங்களும் கேள்விகளும்

*
தீக் குச்சியில்
தீ பந்தம்
காடுகள் அஞ்சுகின்றன ...!
*
படியில் அளந்த
உழவனுக்கு கடைசி
படி மட்டும் ...!
*
எவரஸ்ட் உச்சியில்
பள்ளம் பள்ளம்
தானே...?
*
நிலாவில் யாரும்மில்லை
எவ்வண கிழவியாருக்காக
வடை சுடுகிறாள் ...?
*
பெண்ணின்
கூந்தலுக்கு கார்மேகத்தில்
நூல் எடுத்தானோ இறைவன் ...!
*
கடிகாரம்
இயங்கவில்லை என்பதால்
நாட்கள் ஓடாமலா இருக்கிறது
வாய்ப்பு இல்லை என்றால் என்ன ...?
*
பசி வந்த வயத்துக்கு
ருசி மறந்து போச்சு ....!

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (14-Oct-14, 9:56 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 66

மேலே