கொள்ளை லாபம்
நேர்மை .. நியாயம்..
தர்மம்..மனிதம்..
ஏலத்தில் கேள்விகள் சிலவே..
எடுத்திட்ட தொகையும் குறைவே..!
மீந்தவை பெருமளவு!
..
பெரு நஷ்டம் ...கடவுளுக்கு!
ஆசை..காமம்..
போதை..பொருள்..
புகழ்..பதவி ..
போட்டி ..பொறாமை..
அத்தனையும் விற்றுப் போயின
அட்டகாசமான பெருந்தொகைக்கு..!
மீந்தவை ஏதுமில்லை!
..
கொள்ளை லாபம் ..சாத்தானுக்கு !

