இறுதி ஊர்வலம்

...........................சிறு க(வி)தை.................................

........................இறுதி ஊர்வலம்..............................


அங்கே பெரும் கூட்டம் கூடியுள்ளது
ஆனால் ஆரவாரம் இல்லை
அமைதி அனைவரையும் அடிமையாக்கி உள்ளது

சற்று உற்று நோக்கின் ஆம்
அங்கு நடப்பது ஓர்
இறுதி ஊர்வலம்

ஒரு பிணத்தை நான்கு பேர்
தூக்குவது உலக வழக்கம் ஆனால்
இங்கு பத்துபேர் தோள் மேலே

அவ்வுடல் பார்க்க மெலிந்துதான் உள்ளது
ஆனாலும் மிகவும் சிரமபட்டனர்
தோள் சுமையை விட
மனச்சுமை அதிகம் அவர்களுக்கு அன்று

இவ்வுயிர் தங்களுக்கு
பல வழிகளில் உதவி செய்துள்ளது
நேரடியாகவும் மறைமுகமாகவும்

இவ் ஊர்வலம் கண்டும் சில மனிதர்கள்
கண்காணாதவராய் கடந்து சென்றனர்

ஊர்வலத்தில் ஒருவர் கூறினார்
மனிதன் எப்போதும் இப்படித்தான்
தனக்கு உதவியவர்களை தாண்டியே செல்வான்
அது அவனுக்கு புதிதல்லவே..

ஆம் என்றார் மற்றொருவர்..

ஊர்வலம் பின்னே வர
முன்னே வழிசெய்து கொடுத்தனர்
மற்றவர்கள் வேதனையுடன்

அது அவர்கள் மகிழ வேண்டிய தருணம் - ஆம்
அது அவர்கள் மகிழ வேண்டிய தருணம்
ஆனால் மனதில் எங்கோ ஒரு வேதனை...

ஆம் அது ஓர் தேனீயின்
இறுதி ஊர்வலம்
எறும்புகளின் தலைமையில்....

எழுதியவர் : ச.ஷர்மா (15-Oct-14, 8:41 pm)
Tanglish : iruthi oorvalm
பார்வை : 170

மேலே