உன் ஒற்றை பார்வையும் அதன் அர்த்தமும்
ஏதேதோ உன்னிடம் பேச
யோசித்த எல்லா வார்த்தையும்
தொலைந்து போயின -- உன்
ஒற்றை பார்வை
என் மீது விழுகையில் ....
எந்த மெனகிடும் செய்யாமல்
மனதை களவாடும் வித்தை
அறிந்தவள்முன் எப்போதும் நிற்கிறேன்
நிறையயுதபானியாய் ....
ஈவு இறக்கம் என்பது
சிறிதும் இன்றி
காதலை கண்களால் சொல்லி
அடித்து போகிறாய் என்னை
வலிக்காமல் வலிக்கிறது
உன் ஒற்றை பார்வையும்
அதன் அர்த்தமும் ...........