விழித்திடு பெண்ணே விழித்திடு

பெண்ணே! பெண்ணே!
விழித்து விடு,
இனி வருங்காலம்
உன்னால் விடியுங்காலம்!

நீ யார்? என்று
உலகம் அறிய வேண்டும்
உன்னைக் கண்டு
உலகத்தார் வியக்க வேண்டும்

பூமியில் சமைக்கும் நீ
நிலவில் சாப்பிட வேண்டாமா?
நட்சத்திரத்தோடு நீ
நட்பு கொள்ள வேண்டாமா?

பெண்கள் வீட்டை விட்டுத்
தாண்டாத காலம் மாறி
பூமியை விட்டேத் தாண்டிச் செல்கிறோம்- என்று
முரசு கொட்டி முழக்கமிடு!

பெண்ணாய் பிறந்து விட்டேனே என்று
வருந்தி நீயும் நிற்காதே!
பெண்ணாய் பிறந்தேன் என்று
பெருமையோடு சொல்லிக்கொள்!

காத்திருக்கிறது உலகம் - உன்
கட்டளைக்காக!
பூத்திருக்கிறது ரோஜா -நீ
சூடுவதற்காக!

எதிர்த்து நிற்கும் எதிரிகளை -உன்
விழியசைவில் வீழ்த்தியடி!
தரணியெங்கும் உன் வசம் -நீ
தடையின்றி செயல்படு!

இத்தனை நாள் இருளோடு
அத்தனைக்கும் இனி விடை கொடு!
அம்பென புறப்படு-நீ
அகிலத்தை வென்றிடி!

முடியும் என்று நிமிர்ந்திடு!
விடியும் பொழுது உன்னாலே!
நொடியும் நீ தயங்காதே!
விழித்திடு! பெண்ணே விழித்திடு!

எழுதியவர் : தங்க மணிகண்டன் (16-Oct-14, 9:16 pm)
பார்வை : 482

மேலே