உன் நினைவுகளோடு வாழ்ந்திடுவேன்
என்னை நேசிக்க நேரமில்லா உன்னை
யோசிக்கா நேரமில்லை எனக்கு !
வாசித்துப் பார் என் கவிகளை - புரியும்
உனக்கு நான் வாழ்வது !
உனக்காக அல்ல
என் வாழ்வே நீதான் என்பது !
ஊடலும் கூடலும் கண்டு உடல் உரச - உன்
கணவானாக வாழ வேண்டுமென்ப தில்லை !
என் உள்ளம் உரசும் - உன்
நினைவுகளோடு வாழ்ந்திடுவேன் !
காலம் முழுதும் - உன்
காதலனாகவே !