என் உயிர் பிரியும் வலி

வலிக்கும் வார்த்தைகள்
நீ தருகிற தருணமெல்லாம்
என் உயிர் பிரியும் வலி
உணர்ந்திடும் மனம்மா

உன் சம்மதம் வரும்வரை
தொடரும் இந்த நிலை
நாளும் என் கவலை
உன் மனதிற்கு தெரியவில்லை

என் வலி நீ உணர்ந்தாலும்
அதுவும் உனக்கு வலிக்குமென்று
ஏதும் சொல்லாமல்
மௌனமாய் இருக்கின்றேன்
உன் மௌனத்தை தொடர்கின்றேன்

எழுதியவர் : ருத்ரன் (17-Oct-14, 12:03 pm)
பார்வை : 159

மேலே