எனக்கு தினம் தினம் கவிதை வர
ஒரு காதல் வருகிறதே
உன் கண்களை பார்கையிலே
என் கனவுகள் பலித்திடுமோ
உந்தென் வரவாலே
கவிதைக்கு கால்முளைத்து
காலாற நடந்து சென்றால்
உன் உருவம் கொண்டிருக்கும்
என்பதை காட்டிவிட்டாய்
கவிதைக்கும் உயிர் உண்டு
கண்டேன் உன்னால்தான்
நீ பேசிடும் வார்தைஎல்லாம்
தானாய் ஒரு கவிதை
நான் கவி எழுத
வார்த்தை தேடுகின்றேன்
நீயோ கவிதை சொல்ல
உன் பார்வை போதுமென்றாய்
ஒரு முறை பார்த்துவிடு
எனக்கு தினம் தினம் கவிதை வர
உன் சம்மதம் சொல்லிவிடு
நான் கவிஞன் ஆகிவிட