விலகி நில்லாயோ மனமே

விலகி நில்லாயோ மனமே

ஆர்ப்பரிக்கும் பிறவிக் கடலை
'நான்' கடந்து ,நான் கடக்க
எத்தனிக்கும் நீண்ட பயணத்தில்
துடுப்பாக உதவாமல்
இடையூறு செய்கிறாயே !
இது நியாயமா ?

ஆசை எனும் ஜாலம் காட்டி
மோசம் செய்கிறாய் !
கோபக் கனல் தூண்டி
தகிக்க வைக்கிறாய் !
ஐயத்தை ஏவிவிட்டு
அசைத்துப் பார்க்கிறாய் !
அழுக்காறு எனும் விஷவிதையை
விதைக்கப் பார்க்கிறாய் !

இந்த உடலல்ல நான்
மனமும் அல்ல
உள் உறையும் இறையருளைக்
கண்டுணர்ந்து இணைவதுவே
உயிரின் உயர் நோக்கம் என்றால்
இறைஞ்சுகிறேன் மனமே

நீ விலகி நில்லாயோ ?????

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (17-Oct-14, 11:14 pm)
பார்வை : 88

மேலே