என்னுடைய கதை
*
தனது
கண்ணே கரையும் படி
அழுகிறாள் தாய்
உனக்கு பொழுது போக கதை சொன்ன
என்னக்கு பொழுது போகலன்னு
என்னுடைய கதையை சொல்லுற ......!!!
*
தண்ணிர் கொடத்துல உன்ன சுமகரப்போ
தண்ணிர் கொடத்த இடுப்புல வச்சா
உன்னக்கு வலிக்குமேனு தலையில் சுமந்தேன்
பத்து மாசம் பொத்தி வச்சேன்
பலவாரு எண்ணி வச்சேன்
நீ தானே தள்ளி வச்ச
நீ வாழ்க ...!!!!
*
பொண்ண புறந்திருந்தா
நா கொடுத்திருப்ப வேறயிடத்துல
பையனா பொறந்துட்டியே
நீ ராசாவா வாழத்தான்
நா வேலைக்காரியா போயிருந்தேன்....!!!!!
*
ஏழாவது மாசத்துல ஒதச்ச
நீ பத்தரமா , சந்தோசமா
இருக்கேனு நெனச்ச
இப்ப ஒதச்ச நீ
கஷ்டத்துல இருக்கேனு
நெனச்சேன் ....!!!!
*
மூக்கு புடிக்க நீ திண்ண
முக்கா கிலோ கறி எடுத்து
மூந்து பார்த்து நா வச்சேன்
பூச்சி கடிச்சா புள்ள துடிக்குமேன்னு
முழுச்சிக் கிட்டு இருந்த
உன் மொகத்த பாக்கவே பிடிக்கலன்னு
சொல்லிபுட்ட ...!!!!
*
பட்டா வாங்க வேண்டிய பணத்த
பட்டம் நீ வாங்கத்தான் கொடுத்து
வச்சேன்
ஒனக்கு பொண்ணு தேடித்தான்
எட்டு ஊரு போயிருந்தேன்
இப்ப அவ பேச்ச கேட்டு
எட்டி நீ ஒதச்ச ...!!!
*
பொறுக்கினு
பேரு எடுத்தாலும்
பொக்கிஷம் நீ தான்னு நா வளர்த்த
உனது உள்ளத்திலும் ,இல்லத்திலும்
நான் இருக்கும் போதே
இந்த விதி தெரிந்து இருந்தால்
அப்பொழுதே ஆறடி பள்ளத்தில்
நானே பதுங்கியிருப்பேன் ....!!!!!
*
இது எல்லாம் என் விதியினு
நெனச்சி அழுவுல
என் பால் நிலா இப்படி தேய்தேனு
கரு விழி கார்மேகமா பொழிது...!!!!
*
என்னுடைய ஆசையெல்லாம் ஒண்ணுதா
வயத்துக்கு சோறு போடலனாலும் பரவாயில்ல
வாயிக்கு ஒரு பிடி அரிசி போடுவியா
எனது மகாராசனே.....!!!!!!!!!!