கவிதை தலைப்பு - துகிலாத நினைவுகள் கவிதைப் போட்டிக்கான தலைப்பு

நாட்கள் கரையத்தான் செய்கின்றன - உருளும்
மாதங்கள் உரையைத்தான் செய்கின்றன.
ஆண்டுகள் ஓடத்தான் செய்கின்றன.
ஆயினும் மனிதனின் துகிலாத நினைவுகள்
அகலாமல் வாழத்தான் செய்கின்றன.

இறப்பதற்குள் இருப்பதற்கு முகவரித்தேடும் மனிதர்கள்
இருப்பதற்குள் இணையில்லா ஆசைகளோடு
இன்புற்று வாழ வழிக்கான உழைக்கும்
ஈடிலா பேற்றின் துகிலாத நினைவுகளில்
ஈனமில்லாமல் வாழ்பவனின் எண்ணங்கள் துளிரவேண்டும்.

திறவுக்கோல் இல்லாமல் திரவாதக் கதவைப்போல்
உறவுக்கோலாய் மதிக்கின்ற உணர்வுகளின்
உல்லாசப் பயணத்தில் செல்லுகின்றவர்களின்
உற்சாகங்கள் நெகிழும் துகிலாத நினைவுகள்
உருப்பெற்று உன்னதமானதாய் நிலைப்பெற வேண்டும்.

மடிசுமந்த வயிறும், மண்சுமந்த உயிரும்,
மட்டில்லாப் பேரின்பம் காணும் துகிலாத நினைவுகள் ,
மலரினம் போல் பூத்துக் குலுங்க - ஈர்க்கும்
மாந்தர்கள் நானிலத்தில் நிலைப்பெற வேண்டும்.
மண்ணும் விண்ணும் போற்றிடல் வேண்டும்.

மாந்தராய் பிறத்தல் அரிது. என்ற
மேன்மைக்கேற்ப தம்மை அறிந்து
உண்மைக்கேற்ப விளங்கும் துகிலாத நினைவுகள்
உள்ளோர்களின் செயலாவும் நன்மைக்கேற்ப
உருவானவர்களின் உயிர் மெய்ப்பட வேண்டும்.

எழுதியவர் : ச.சந்திர மௌலி (18-Oct-14, 5:43 am)
சேர்த்தது : சந்திர மௌலி
பார்வை : 81

மேலே