கவிதை தலைப்பு - கனவுகள் மெய்ப்பட வேண்டும் கவிதைப் போட்டி

இமை மூடா விழிகள் இல்லை.
கனவுகள் இல்லா உறக்கம் இல்லை. - அதில்
காணும் நிஜங்கள் மெய்ப்பட வேண்டும்.

உவமைகள் இல்லா கவிதைகள் இல்லை.
உணர்வுகள் இல்லா வாழ்க்கை இல்லை - அதில்
உருளும் நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

பாக்குகள் இல்லா வெற்றிலை இல்லை
நோக்கங்கள் இல்லா பாதை இல்லை.
ஆக்கங்கள் இல்லா செயல் இல்லை - அதில்
நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

கருத்தாழம் மிக்க கலையெழில்
கண்ணகத்தே மிளிர்தல் போல் - நம்
கனவுகளும் மெய்ப்பட வேண்டும்.

வல்லரசு நாடான இந்தியாவின்
சொல்லரசுகள் மிக்கவர்கள் உள்ளவரை
நம் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

விதைத்தவர்களின் கனவுகள் எல்லாம்
விளைச்சலில் காணுதல் போல் - உயர்வுக்காக
அலைச்சலில் மனதை விதைக்கின்ற நம்மவரின்
ஆர்ப்பரிக்கும் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

அஞ்சாதப் போருக்கு செல்லுகின்ற வீரனைப் போல்
நெஞ்சார வாழ்விக்கும் நம் அம்மைஅப்பனின்
நினைவான ஆசைகள் நம்மால் மெய்ப்பட வேண்டும்.

ஆன்றோன் வள்ளுவன் வாக்கில் - வாழ்வியலுக்கு
ஆழச் சொன்னக் கருத்துக்கள் எல்லாம்
வீழ வண்ணம் மெய்ப்பட வைக்க - திறமையை எண்ணி
வளர்கின்ற நம்மவரின் கனவுகள் மெய்ப்பட வேண்டும்.

கொடுமீசை பாரதியின் கனவுகள் - நம்மால்
கெடுதல் இன்றி நாளை மெய்ப்படவேண்டும் எனில்
சுடுதல் இன்றி சுகமாய் தேசமிதை காப்போம்.
சூழ்ந்துவரும் தீவரவாதத்தை வேரறுப்போம்.

(நான் முதல் முதலாக இணையதளத்தின் மூலம் கவிதைப் போட்டியில் அறிமுகம் ஆகின்றேன்.)

எழுதியவர் : ச.சந்திர மௌலி (18-Oct-14, 5:28 am)
பார்வை : 468

மேலே